புதுச்சேரி:கவுண்டன்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.தட்டாஞ்சாவடி, கவுண்டன்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் புதிதாக மூன்று நிலை ராஜாகோபுரம் அமைக்கப்பட்டு பொலிவு பெறும் பணி நடந்து வந்தது. இக்கோவிலின் கும்பாபிேஷக விழா ஏப்ரல் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 9ம் தேதி மகா கும்பாபிேஷக விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவின் காரணமாக வரும் 9ம் தேதி நடக்க இருந்த கும்பாபிேஷக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை முத்துமாரியம்மன் வெங்கடேச பெருமாள் தேவஸ்தான தலைவர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.