கொரோனாவில் இருந்து காக்க மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2020 11:04
திருச்சி : கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலக நன்மைக்காக வேண்டியும், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு தன்வந்திரி யாகம் நடந்தது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கோவில்களில் உலக நன்மை வேண்டியும், நோய்கள் குணமாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தன்வந்திரி யாகம் நடத்துகின்றனர். அதன்படி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதியில், உற்சவர் மண்டபத்தில் சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது. இதில் கோயில் உதவி ஆணையர் டி.விஜயராணி மற்றும் கோயில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.