Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன் ராமனை நினை மனமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஸ்ரீ ராமருக்கு விருந்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
06:04

பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்

இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar