கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணி முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2012 10:05
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முக்கியமான கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் படைவீரர், ஓய்வு பெற்ற காவல்துறையினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோவில்களின் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், 62 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாலை 6.00 மணி முதல், காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் பணியில் இருத்தல் வேண்டும். மேற்படி கோவில் பாதுகாப்பாளராக தகுதிபெறும் பணியாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். விடுப்பு காலத்தில் சம்பளம் வழங்கப்படமாட்டாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்களது பணிவிடுப்பு சான்றிதழ் மற்றும் வயது சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில், நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு நிஜாமுதீன் கூறியுள்ளார்.