பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
01:04
கலசப்பாக்கம்: உலக மக்களை கடுமையாக பாதித்து வரும் கொரோனாவே ஓடிப்போ எனக்கூறி, கோவிலில் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர். நாட்டில் கொரோனா பாதிப்?பை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் பஞ்., நட்சத்திர கோவில் பகுதியான, ஓம் சக்தி அம்மன் கோவிலில், பெண்கள் ஒன்றுகூடி வேப்பிலையை கையில் வைத்துக்கொண்டு, மக்களை பலி வாங்கி வரும் கொரோனாவே ஓடிப்போ, ஓடிப்போ, கடவுளே மக்களை காப்பாற்று என ஒப்பாரி வைத்து, நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில், கிராம மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும், வீடு வாசல் முன், மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து, வேப்பிலை வைத்து வழிபட்டனர்.