Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற ... கொரோனாவிற்கு எதிராக 21 நாட்கள் தியான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:04

உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்குளம், பாரதி நகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டு சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடுவர். பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல்(பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கும். பாஞ்சாலி திருமணமும், விழாவின் 14ம் நாள் திருநங்கைகள்(அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் ஆடிப்பாடி மகிழுவர். 15ம் நாள் தேரோட்டம் நடக்கும். இதில் பல கிராமங்கள், மாவட்டங்கள்,, மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பொதுமக்கள், திருநங்கைகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது உலகையே கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இதனால் இவ்விழா நடப்பதால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுமென அப்பகுதியை சேர்ந்த மக்கள் கருதினர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் விழா குழுவைச் சேர்ந்த கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வரும் 21ம் தேதி நடக்க இருந்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு நடக்கவிருந்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar