பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
11:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா இந்தாண்டு நடக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அவ்வகையில், பிரசித்தி பெற்ற பண்ணாரி, பெருமாநல்லுார் குண்டம் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், தமிழகத்தின் முக்கிய கோவில்களில் நடைபெற இருந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இச்சூழலில், அவிநாசி கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும். நடப்பாண்டு, இம்மாத இறுதியில் துவங்கி, மே முதல் வாரம் திருவிழா நடப்பதாக இருந்தது. 21 நாள் ஊரடங்கு, வரும் 14ம் தேதியுடன் நிறைவடைவதால், வழக்கம்போல், தேர்த்திருவிழா நடக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஊரடங்கு நீட்டிக்கும் வாய்பபுள்ளதாக தகவல்கள் வருவதால், தேர்த்திருவிழா நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து, செயல் அலுவலர் லோநாதன் கூறுகையி்ல், திருவிழா நடத்துவது குறித்து, உயரதிகாரிகள்தான் முடிவு செய்வர், என்றார்.