பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
11:04
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அர்ச்சகர்கள், கணக்கர், உதவியாளர்கள், மடப்பள்ளி சமையலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என, பல பிரிவினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அந்தந்த கோவில் நிர்வாகத்தின் சார்பில், சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, சம்பளம் காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால், பல செயல் அலுவலர்கள், கோவிலுக்கு வந்து கணக்கு பார்த்து, சம்பளம் போடவில்லை. இதனால், கோவில் பணியாளர்கள் பலர், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, தவித்து வருகின்றனர்.கோவில் பணியாளர்கள் கூறியதாவது:செயல் அலுவலர்கள் கோவிலுக்கு சென்று சம்பளம் போட, அறநிலையத்துறை கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழாத வகையில், கோவில் பணியாளர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில், சம்பளம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.