மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை காலி செய்ய நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2020 11:04
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புது மண்டபத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அருகில் குன்னத்துார் சத்திரத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை துவங்கியுள்ளது.புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
அங்குள்ள தையல் கடைகள் உட்பட 301 கடைகளுக்கு மாற்று இடம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இதில் தாமதம் ஏற்பட்டது. புது மண்டபம் கடைகளை அருகில் குன்னத்துார் சத்திரத்திற்கு மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி சார்பில் 48 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத்தளம், முதல், இரண்டாவது தளம் மற்றும் 730 கடைகளுடன் கூடிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுமானப்பணி ரூ.6 கோடியே 75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 95 சதவீத பணி முடிந்துள்ளது. வர்ணம் பூசும் பணி முடிந்ததும் மே இறுதியில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.புது மண்டபம் கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும் சமூக இடைவெளியுடன் குன்னத்துார் சத்திரத்தில் இறுதி கட்டுமான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊடரங்கு முடிந்ததும் மாநகராட்சி சார்பில் கடைகளை குன்னத்துார் சத்திரம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒதுக்கும் பட்சத்தில் புது மண்டபத்தை காலி செய்ய தயாராக இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.