மதுரை : பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில், 20 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல் நாள் இரவு மாப்பிள்ளை விருந்து, திருக்கல்யாணத்தன்று அன்னதானம் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள், போலீசார், தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தினமும் உணவு வழங்கும் பணி நேற்று சேதுபதி பள்ளியில் துவங்கியது. தலைவர் சாமுண்டி விவேகானந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் உதயகுமார், பள்ளி செயலாளர் பார்த்தசாரதி துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் கனக சுந்தரம், கார்த்திகேயன், கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.