பதிவு செய்த நாள்
02
மே
2020
10:05
சென்னை: கூவத்துார் கிராம மக்களுக்கு, நிவாரணமாக, 10 டன் அரிசியை, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் வழங்கினார்.ஊரடங்கில், மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கக் கூடாது என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று கூவத்துார் மக்களுக்கு, 10 டன் அரிசியை, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் கோதண்டராமன் நேற்று வழங்கினார்.நிவாரணப் பொருட்கள் அனைவருக்கும் சென்ற அடைய வேண்டும் என்ற நோக்கிலும், கூட்டம் சேராமல் இருக்கவும், ஐந்து நபர் குழுக்களை அமைத்து, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.அறங்காவலரின் மனித நேயத்தை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.