“நல்ல பெண்ணே சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்று விட்டால், அவரைப் பாதுகாப்பாள் என்கிறார் நாயகம்.கஷ்டமான சூழலிலும் மனைவி இனிய முகம் காட்டினால், வெளியே செல்லும் கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்புவார். அவர் கட்டளையிட்டால் ஏற்பாள் என்பது அடிமைத்தனம் அல்ல. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒரு வேளை, கணவரின் முடிவு துன்பத்தைத் தரும் என்றாலும், நேரம் பார்த்து எடுத்துச் சொல்லி புரிய வைப்பாள். அவர் அவளை விட்டும் சென்று விட்டால் அவரைப் பாதுகாப்பாள்” என்பதிலுள்ள அவரை என்பது புரியாமல் இருக்கலாம். அதாவது, கணவர் இல்லாத நேரத்தில் அவருக்காகவே நான் இருக்கிறேன் என கற்புநெறியை பாதுகாப்பாள் என பொருள் கொள்ள வேண்டும்.
இப்தார்: மாலை 6:36 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:24 மணி.