பதிவு செய்த நாள்
06
மே
2020
09:05
திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வசந்த உற்சவ விழா நிகழ்ச்சிகள், கோவில் இணையதள முகவரி மூலம், ஒளிபரப்பு செய்யப்படுகிறது’ என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு உத்தரவால், கடந்த மார்ச், 25 முதல் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சுவாமிக்கு வழக்கம்போல் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அவசர, அவசிய பணிகளுக்கு குறிப்பிட்ட பணியாளர்கள், சமூக இடைவெளியுடன் அன்றாட பணிகளை தொடர்ந்து செய்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினமான நாளை மற்றும், 7ல், பக்தர்கள் கோவிலினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வசந்த உற்சவம் கடந்த, 26ல், தொடங்கி சுவாமி உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதை, www.arunachaleswarartemple.tnhrce.in என்ற, கோவில் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதை பக்தர்கள் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.