மங்கலதேவி கண்ணகி கோயிலில் பூஜை நடத்த அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 11:05
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான வண்ணாத்திப் பாறை மலை உச்சியில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கண்ணகி அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் சமூக இடைவெளியுடன் பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர். ஆனால் இரு மாநில சம்பந்தப்பட்ட விழாவாக இருப்பதால் இன்று (மே 7) பூஜைகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜ் கணேஷ், பொருளாளர் முருகன் தெரிவித்தனர்.