Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் ... வள்ளலார் பிறந்த நாள்: அன்பை மட்டும் விதைப்போம்.. ஆனந்தத்தை அறுவடை செய்வோம்! வள்ளலார் பிறந்த நாள்: அன்பை மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்; காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்; காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

பதிவு செய்த நாள்

05 அக்
2026
10:10

சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.


ஸ்ரீ வியாசராஜ மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகளின் 10வது ஆண்டு பீடாரோஹண விழாவையொட்டி, தர்ம ரக் ஷண மஹோத்சவம் நேற்று கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரமில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழா தொடக்கத்தில், கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜின் நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து, காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ வியாசராஜ மட பீடாதிபதி ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ அஹோபில மட பீடாதிபதி ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர்.


காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: ஒவ்வொரு குடும்பமும் குலம், குலதெய்வம், குலகுரு உள்ளிட்ட பாரம்பரியங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மதச்சார்பற்ற தன்மை என்பது நம் ஆன்மிகம், சம்பிரதாயம், கர்மானுஷ்டானங்களை கைவிடுவது அல்ல. சனாதன தர்மத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே பொதுவான அம்சங்கள் அதிகம் உள்ளன. வேறுபாடுகளை முன்னிறுத்தாமல், பொதுவான வைதீக அடிப்படையை முன்னிறுத்த வேண்டும். வைதீக ஒற்றுமை ஏற்பட்டால், தெய்வீக ஒற்றுமையும் உருவாகும். வேதமே தர்மத்தின் வேர். தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


‘தினமலர்’ நாளிதழின் வேலுார் மற்றும் திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர் ஆர் கோபால்ஜி பேசியதாவது: மூன்று சமுதாயங்கள் மற்றும் சம்பிரதாயங்களைச் சேர்ந்த மகான்கள் ஒரே மேடையில் கூடி ஒற்றுமையை வெளிப்படுத்துவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. ஒற்றுமையுடன் இணைந்து சமுதாயப் பணியாற்றுவது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை. சனாதன தர்மத்தின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல, அனைவரும் நேரத்தை ஒதுக்கி களப்பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் விஜய் ஆனந்த், காஞ்சிபுரம் ஏனாத் துாரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலை வேந்தர் ஸ்ரீ குடும்ப சாஸ்திரி, துணை வேந்தர்கள் ஸ்ரீ தேவநாதன், ஸ்ரீ ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஸ்ரீ ப்ரமஹம்ஸ ஆச்சார்யா, டாக்டர் உ.வே.வெங்கடேஷ் சிறப்பு சொற்பொழிவாற்றினர். 


மகா பெரியவர் வேதங்களை பாதுகாத்தார்.. ஸ்ரீ அஹோபில மட பீடாதிபதி ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமிகள் பேசியதாவது: சனாதன தர்மத்தின் அடிப்படையே கர்மானுஷ்டானம். தினசரி கடமைகளைச் சரியான முறையில், ஆன்மிக நெறிப்படி பின்பற்றுவதே கர்மானுஷ்டானத்தின் முக்கிய நோக்கம். வேதங்களைப் பாதுகாக்க, மன்னர்கள் காலம் முதல் பலர் நித்ய கர்மா முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். மகாபெரியவர் வேதங்களைப் பாதுகாக்க அறக்கட்டளை அமைத்து, வேதம் பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கினார். இதன் பலனாக, இன்று ஆயிரக்கணக்கானோர் வேதம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தெளிவும், நம்பிக்கையும் பெற முடியும்


ஸ்ரீ வியாசராஜ மட பீடாதிபதி ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் பேசியதாவது: பீடங்களின் வழிகாட்டுதலுடன் தர்மத்தைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் முக்கியப் பொறுப்பு. சாஸ்திர அர்த்தங்களின் வாயிலாக பல்வேறு தத்துவங்களை அறிந்து, தாம் பின்பற்றும் தர்மத்தின் மீது தெளிவும் நம்பிக்கையும் பெற முடியும். பீடங்கள் குருகுலங்கள், கல்வி நிறுவனங்கள், பாரம்பரிய அறிவைத் தொடர்ந்து காத்து வருகின்றன. இத்தகைய மாநாடுகள் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar