மலட்டாற்று பிரபஞ்ச ஆற்றல் மையம் சார்பில் ருத்ர ஹோமம்: யாக வேள்வி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 10:10
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ஹோமம் நடந்தது.
பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மையத்தின் நிறுவனர் சுவாமி வாகட குருஜி தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன், கடலாடி தேவர் மகாசபை முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாக வேள்வியில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு உலக நன்மைக்காகவும் மழை வளம் வேண்டியும் சிறப்பு பிராத்தனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக வேள்விக்கான ஏற்பாடுகளை பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மையத்தினர் செய்திருந்தனர்.