மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சோமவார வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 10:10
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் தீப ஒளியுடன் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரகாரம் வலம் வந்தும் தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிப்ட்டனர்.