உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ருத்ர ஹோமம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 03:10
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்தது
ருத்ர ஹோமம் என்பது சிவபெருமானின் உக்கிர மற்றும் அருள் வடிவமான ஸ்ரீ ருத்ரனை வேண்டி நடத்தப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். வேதங்களில் உள்ள கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ ருத்ரம் மந்திரங்களை உச்சரித்து அக்கினி பகவான் மூலமாக சிவபெருமானுக்கு பூஜிக்கப்படுகிறது. ஹோம வேள்விகளால் உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், தொழில் வளர்ச்சி, காரிய வெற்றி, மன அமைதிக்காகவும் நடத்தப்படுகிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மரகத நடராஜர் சன்னதிக்கு அருகே உள்ள வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்தது. காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரை பாராயணம், வேதிகா பூஜை, 11 ருத்திரர்கள் ஆவாகன பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. ஏராளமான கோயில் ஸ்தானிக குருக்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் யாக வேள்வியில் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் கோவை சண்முகர் அர்ச்சனை குழுவினர் செய்திருந்தனர்.