சுவாமி விக்ரகங்களைத் தொட்டுக் கும்பிடுகிறார்களே! இது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 04:05
விக்ரகங்களை அதற்குரியவர்களைத் தவிர மற்றவர்கள் தொடக்கூடாது. இப்படிச் சொன்னால் சிலர் தவறாகப் புரிந்து ஜாதிப் பிரச்னையாக்குகிறார்கள். எல்லோரையும் வேறுபாடு இல்லாமல் சமநிலையாக பக்தர்கள் என்ற ஒரே நோக்கில் பார்ப்பது கோயில்களில் மட்டும் தான். அர்ச்சகர்களோ, பட்டாச்சாரியார்களோ பக்தர்களின் நலனுக்காகவே பூஜை செய்கிறார்கள். அதற்கென சில நியதிகளை அவர்களுக்கு சாஸ்திரம் விதித்திருக்கிறது. எல்லோரையும் போல் தலைமுடி, உடை, இவைகளை அவர்கள் அனுபவிப்பதில்லை. கிடைத்ததை சாப்பிடுவதில்லை. கோயிலில் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக சில இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். இப்படி இருந்து பூஜை செய்தால் தான் எல்லோரும் நன்மை பெறலாம். எல்லோரும் சுவாமி விக்ரகங்களைத் தொட்டு வழிபட்டால் நெறி நின்று செய்யப்பட்ட பூஜையின் புனிதத் தன்மை கெடும். பலன் குறையும். பாதிப்பு ஏற்படும். இதனால் தான் கட்டுப்பாடு.