பதிவு செய்த நாள்
11
மே
2020
01:05
வந்தவாசி: வந்தவாசி அருகே, ஜெயின் கோவிலில், இரண்டு சுவாமி சிலைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்தில், முனிசுவிரத பகவான் ஜெயின் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூஜைகளை முடித்து விட்டு, அர்ச்சகர் சாந்தகுமார், 45, கோவிலை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்கச் சென்றார். அப்போது, கோவிலின் பிரதான கேட் உள்பட, மூன்று கிரில் கதவுகள் உடைக்கப்பட்டு, கோவில் உள்ளே, ஆறு மற்றும் ஏழு அங்குலம் உயரம் கொண்ட, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஜெயின் சுவாமி பித்தளை சிலைகள், இரண்டு பீடம் ஆகியவை திருடு போனது தெரிந்தது. இது குறித்து அவரது புகாரின்படி, பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.