Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: பதவி தேடி வரும் ரிஷபம்: அரசின் சலுகை ரிஷபம்: அரசின் சலுகை
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மேஷம்: முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
மேஷம்: முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

12 மே
2020
05:05

பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார். இதனால் மாதம் முழுவதும் நன்மை கொடுப்பார். ராகு, செவ்வாய் சாதகமாக இருப்பதால் நன்மை கிடைக்கும். புதன் மே 24 வரை உங்கள் ராசிக்கு 2 ம் இடத்தில் இருப்பதால் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன்பின் அவர் 3ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை எனச் சொல்ல முடியாது. இதனால் பகைவர் தொல்லை, அனுகூலமற்ற போக்கு உருவாகும்.

ராகு மற்றும் செவ்வாயால் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சுக்கிரனால் ஆடை, ஆபரணம் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜுன் 4க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். குருவால் நற்பலன் கொடுக்க முடியாது. ஆனால் அவரது 5ம் இடத்துப் பார்வையால் ஆற்றல் மேம்படும். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்தினருக்கு பெருமை தேடித் தருவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது அதிக முயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு பொருளாதார வளம் பெருகும். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தைக் காண்பர். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். சிலருக்கு கண்வலி வரலாம். கேதுவால் ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகு தொழில் வளர்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறார். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கப் பெறுவர்.  ஜுன்4 க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்
* தரகு, கமிஷன் தொழில் செய்வோர் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர். ஆற்றல் மேம்படும். நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு இடமாற்ற பீதி மறையும். சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* மருத்துவர்கள் பணியிடத்தில் நன்மதிப்பு பெறுவர். வேலைப்பளு சற்று குறையும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு ஜுன் 6க்கு பிறகு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பதவி உயர்வு காண்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் பதவி கிடைக்கப் பெறுவர். தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
* பொதுநல சேவகர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். ஜுன்4க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் உளுந்து, துவரை, கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் மூலம் வருமானத்தை பெருக்குவர். புது சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் மே24க்கு பிறகு வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
* அரசு பணியாளர்கள் மே24க்கு பிறகு வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.
* தனியார்துறை பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கலாம். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.
* வக்கீல்கள் அயராமல் உழைக்க வேண்டியதிருக்கும். பணிச்சுமையால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
* ஆசிரியர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் உடனுக்குடன் செய்யவும்.
* விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனை  கிடைக்கப் பெறுவர்.

நல்ல நாள்: மே 14,15,16,20,21,25,26,31, ஜுன் 1,2,3,4,9,10,11,12,13,14,15,16
கவனநாள் : ஜுன் 5,6 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள்தீபம்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar