Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : கார்த்திகை ராசி பலன் கடகம் : கார்த்திகை ராசி பலன் கடகம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026)
மிதுனம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
05:11

மிதுனம்:


மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக்காரகன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி யாவும் முடிவிற்கு வரும். நீங்கள் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். சகாய ஸ்தானத்தில் தனக்காரகன் குருவும் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். நவ. 30 முதல் ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் என்றாலும், 2 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளின் நிதானம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பணம்வரும். நிம்மதியான நிலை ஏற்படும். வயதானவர்களுக்கு உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: டிச. 12.

அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.


பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


திருவாதிரை

நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக்காரகன் ராகு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்திலும், ஞான மோட்சக்காரகன் கேது 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடங்கள் தோன்றும். நீங்கள் மறைமுகமாக வைத்திருந்த ரகசியங்கள் வெளியில்வரும். சிலருக்கு அதனால் சங்கடங்கள் உண்டாகும். அதே நேரத்தில் உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியன் 6 ம் இடமான ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்வரும் பிரச்சனைகளை சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள், வேலைகள் முடிவிற்குவரும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பூர்வீக சொத்தில் சுமுகமான நிலை உருவாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கையில் பணம் புரளும். பொன் பொருள் சேரும். நவ. 30 வரை அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் பெயரைக் கெடுக்கும் அளவிற்கு ஒரு சிலர் செயல்படுவார்கள். அபகீர்த்திக்கும் சிலர் ஆளாகநேரும் என்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உறவினருடன் மோதல் போக்கு உண்டாகும் என்றாலும் எல்லாவற்றையும் எதிர்கொள்வீர்கள். நீங்கள் நினைத்த ஒவ்வொன்றிலும் உறுதியாக இருப்பீர்கள். உங்களை எவராலும் மாற்ற முடியாமல் போகும். நவ. 30 முதல் நிலைமை சீராகும். உங்களை நீங்களே மாற்றம் செய்து கொள்வீர்கள். வியாபாரம் தொழிலில் அக்கறை உண்டாகும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உங்களுக்கேற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நோய்நொடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். விவசாயத்தில் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: டிச. 13.

அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23, 31. டிச. 4, 5, 14.


பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.


புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்

நியாயமான வழியில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி செவ்வாயும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து குரு மங்கள யோகம் உண்டாவதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் யாவும் முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். சகாய ஸ்தானாதிபத சூரியன் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிரிகளை வெல்லக்கூடிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வேலையில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நவ. 30 முதல் ராசியாதிபதி புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். கிடைக்க வேண்டிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். ஷேர் மார்க்கெட் கை கொடுக்கும். சொந்த வீடு என்ற கனவு நனவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு திருமணம் முடிவாகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.

சந்திராஷ்டமம்: நவ. 17. டிச. 14.

அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12.


பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட உங்கள் நிலை உயரும். நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »
temple news
மேஷம்:அசுவினிசூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான ... மேலும்
 
temple news
ரிஷபம்:கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 
temple news
கடகம்:புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு ஆலோசனைக் கூறி வழிநடத்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
சிம்மம்:மகம்எந்த நிலையிலும் வாழ்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
கன்னிஉத்திராடம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலும் ஆத்ம பலமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar