பதிவு செய்த நாள்
14
நவ
2026
05:11
பிறருக்கு ஆலோசனைக் கூறி வழிநடத்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். தன புத்திரக்காரகன் குரு, உங்கள் ராசிக்கு 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குரு பகவானின் பார்வைகள் 6,8,10 ம் இடங்களுக்கு கிடைப்பதால் மறைமுகத் தொல்லைகள் விலகும். நோய் நொடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும் என்றாலும், ஞான மோட்சக் காரகன் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமும் கவனமும் தேவை. பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலைகளில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நீங்களே முன்னெடுத்து செய்கின்றபோது ஆதாயம் கூடும். பெண்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு புத்திசாலித்தனம் வெளிப்படும்.
சந்திராஷ்டமம்: நவ. 17. டிச. 14.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21, 29, 30. டிச. 2, 3, 11, 12.
பரிகாரம்: ஏழுமலையானை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் சனி பகவான் வக்கிரம் அடைந்திருந்தாலும், நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். இடையில் ஏற்பட்ட பிரச்னைகள், போராட்டங்கள் முடிவிற்கு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாயும் பாக்கியாதிபதி குருவும் இரண்டாமிடத்தில் சஞ்சரித்து குரு மங்கள யோகத்தை அளிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிரிகளும் உங்களைக் கண்டு மரியாதை செலுத்துவர். உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும். எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். அதே நேரத்தில், புதிய நட்புகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது நட்பு, தொழில், குடும்பம், உத்தியோகம் போன்றவற்றில் படிப்பினைகளை உண்டாக்கிட இருப்பதால் எந்த ஒன்றிலும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படுவது நன்மையளிக்கும். யார் நண்பர்? யார் துரோகி என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்பதால் உங்கள் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையளிக்கும். செய்து வரும் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல்நிலை சீராகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றாலும், சூரியன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மனதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் உறுதியாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 18. டிச. 15.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 2, 8, 11.
பரிகாரம்: விநாயகரை வழிபட தடைகள் விலகும். நன்மை உண்டாகும்.
நிதானமாக செயல்பட்டு எடுத்த வேலையை முடித்திடக்கூடிய உங்களுக்கு, உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் நவ. 30 வரை சுக ஸ்தானமான 4 ம் இடத்திலும், நவ. 30 முதல் பாக்கிய ஸ்தான சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதாலும் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழிலில் நஷ்டம் கஷ்டம் என்றிருந்த நிலை மாறும்.
வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் கூடும். அரசியல்வாதிகள் நிலை உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கையில் பணம் புரளும். ஷேர் மார்க்கெட் லாபம்தரும் என்றாலும், மாதத்தின் பிற்பகுதியில் புதன் சஞ்சாரத்தின் காரணமாக உங்களுக்கு எதிராக சிலர் அவதூறு பரப்பிட வாய்ப்பிருப்பதால் சுய வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் நேர்மையாக இருப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் உங்களைப் பாதுகாக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மரியாதையும் கணவரின் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும்.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 2, 5, 11, 14.
பரிகாரம்: திருவிக்கிரமனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.