Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : கார்த்திகை ராசி பலன் கன்னி : கார்த்திகை ராசி பலன் கன்னி : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026)
சிம்மம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
05:11

சிம்மம்:


மகம்

எந்த நிலையிலும் வாழ்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசியை விட்டு கேது விலகி இருப்பதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த குழப்பம், பயம் விலகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும் என்றாலும் செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். ஆறாம் இடத்து ராகு  அரியணையில் ஏற்றுவார் என்ற வார்த்தைக்கேற்ப இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். பட்டம் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழிலில் தோன்றிய நெருக்கடிகள் பிரச்னைகள் விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். எந்த ஒன்றிலும் உங்கள் கை ஓங்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திருமணம் கூடி வரும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: நவ. 19, 20.

அதிர்ஷ்ட நாள்: நவ. 25, 28. டிச. 1, 7, 10.


பரிகாரம்: மாரியம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பூரம்

முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றம், செயல்களில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் குடும்பம் தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அலைச்சலை அதிகரித்தாலும் 5,7,9 ம் இடங்களைப் பார்ப்பதால் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலமும் உண்டாகும் என்றாலும், நவ. 30 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். சிலருக்கு மறைமுகத் தொல்லைகள், தேவையற்றப் பிரச்னைகள், அவமானங்கள் ஏற்படும் என்றாலும் உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4 ம் இடத்தில் ராசியாதிபதி கேந்திரமாக சஞ்சரிப்பதால் எதிர்வரும் சங்கடங்களை எல்லாம் சமாளிப்பீர்கள். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதிபதி ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவுடன் இணைந்து குரு மங்கள யோகத்தை உண்டாக்குவதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். சிலருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும் விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி கடினமாக இருந்தாலும் பிற்பகுதி நன்மையாக இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: நவ. 20, 21.

அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 10, 15.


பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


உத்திரம் 1 ம் பாதம்

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சுக ஸ்தானாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சூரியனும் பரிவர்த்தனை அடைவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் முயற்சிகள் முடிவிற்கு வரும்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பட்டம் பதவி தேடிவரும். செல்வாக்கு உயரும். நவ. 30 முதல் உங்கள் தன குடும்பாதிபதி புதன் 4 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை எல்லாம் இல்லாமல் செய்வார். மனதில் இருந்த குழப்பம் விலகும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். ஜென்ம குருவின் பார்வைகள் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கும், களத்திர மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கும் உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய சொத்து சேரும். பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கர்மக் காரகன் சனி பகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் கொள்வது அவசியம். இந்த நேரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு வேலையினையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும், பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பதும் நன்மையை உண்டாக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடிவரும். விவசாயிகளுக்கு விளைச்சலில் அக்கறை தேவைப்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: நவ. 22.

அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 28. டிச. 1, 10.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டு வர வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

பகிர்க copied
 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »
temple news
மேஷம்:அசுவினிசூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான ... மேலும்
 
temple news
ரிஷபம்:கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்:மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
கடகம்:புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு ஆலோசனைக் கூறி வழிநடத்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னிஉத்திராடம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலும் ஆத்ம பலமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar