Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: கார்த்திகை ராசி பலன் மிதுனம் : கார்த்திகை ராசி பலன் மிதுனம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026)
ரிஷபம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
05:11

ரிஷபம்:


கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்

உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சிலர் வசதியான வீட்டில் குடியேறுவீர்கள். வேலையின் காரணமாக வெளியூரில் குடியேறக்கூடிய நிலையும் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு உடல் நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலர் தெய்வ வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்துடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். குரு பகவானின் பார்வை 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் திடீர் வாய்ப்புகள் தேடிவரும். செய்துவரும் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகள் சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வீண்செலவுகள் கட்டுப்படும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் இருக்கும். பிற்பகுதியில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: டிச. 10.

அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 15.


பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட உங்களுக்கு வரும் சங்கடங்கள் விலகும்.


ரோகிணி

திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கிவரும் கர்மக்காரகன் சனி பகவான், நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்துவந்த நிலைமாறும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஞான மோட்சக்காரகன் கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கு தடைபட்டு வந்தவை எல்லாம் இனி கிடைக்க ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வாழ்கையில் ஏற்பட்ட போராட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குரு மங்கள யோகத்தின் காரணமாக வாகனம் வசதி வாய்ப்பு என்ற கனவுகள் நனவாகும். பாக்கிய ராகுவால் தெய்வ அருளும் பெரியோர் உதவியும் கிடைக்கும். உங்கள் நிலை உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். பெண்களுக்கு மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: டிச. 10, 11.

அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 24, 29. டிச. 2, 6, 15.


பரிகாரம்: மதுர காளியம்மனை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும். நன்மை உண்டாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

சாமர்த்தியசாலியான உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய், தனக்காரகன் குருவுடன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள்.  உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்து வருபவர்களுக்கும் ஆதாயம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உங்கள் தன குடும்பாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான புதன் நவ் 30 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். சிலருக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தடைபட்ட வேலைகளை முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண முடியும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திருமணத்திற்காக காத்திருந்த பெண்களுக்கு மாங்கல்யம் ஏறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். நிம்மதியான தூக்கம் இன்றி தவித்தவர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். தெளிவும் தைரியமும் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம்.

சந்திராஷ்டமம்: டிச. 11, 12.

அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.


பரிகாரம்: வைத்தியநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »
temple news
மேஷம்:அசுவினிசூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான ... மேலும்
 
temple news
மிதுனம்:மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
கடகம்:புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு ஆலோசனைக் கூறி வழிநடத்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
சிம்மம்:மகம்எந்த நிலையிலும் வாழ்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
கன்னிஉத்திராடம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலும் ஆத்ம பலமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar