சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். ஞானமோட்சக்காரகன் கேது சுக ஸ்தானத்திலும், யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற பலனும் உண்டாகும். செய்துவரும் தொழில் வியாபாரத்தில் அக்கறை கூடும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் வரவேண்டிய பணம் வரும். வேலைபளு மற்றும் எதிர்பாரா பயணங்களினால் உடல்நிலையும் மனநிலையும் சோர்வடையும். தாயாரின் உடல்நிலையில் ஏதாகிலும் ஒரு சங்கடம் ஏற்படும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி நவ. 30 ல் வக்கிர நிவர்த்தி அடைவதால் செலவு அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் ஏற்படும். சிலருக்கு மருத்துவச்செலவுகள் உண்டாகும். வயதானவர்களுக்கு ஆரோக்கியத்தில் சங்கடம் தோன்றும் என்றாலும், அனைத்தையும் சமாளித்திடக்கூடிய நிலையும் உங்களுக்கு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தனக்காரகன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வரும் பிரச்னைகளை எதிர் கொண்டு வெற்றியடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் நீண்ட நாள் கனவு நனவாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வதும், விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பதும், பெண்கள் எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பதும் நன்மையளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: டிச. 7,8.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18,25,27. டிச. 9.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பரணி
நினைப்பதை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். புதிய நட்பால் செயல்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலினரால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். செய்துவரும் தொழில் வியாபாரத்தில் கூட அக்கறை செலுத்த முடியாத அளவிற்கு கவனச்சிதறல் உண்டாகும். வரும் வருமானம் போகும் இடம் தெரியாமல் போகும். அயன சயன ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனியும் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சந்தோஷத்தின்மீது உங்கள் மனம் பயணிக்கும் என்றாலும், நவ. 30 முதல் உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மங்களக்காரகன் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களை நீங்களே திருத்திக் கொள்வீர்கள். கவுரவம் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் மாறும். செயல்களில் வேகம் இருக்கும். பட்டம் பதவி என்பதெல்லாம் தேடி வரும் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு மரியாதையும் செல்வாக்கும் உண்டாகும். பெண்களுக்கு கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும் வயதானவர்கள் உடல்நிலையில கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 8,9.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18,24,27. டிச. 6,15.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மனம் தெளிவடையும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 1 ம் பாதம்
சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சிகள் இழுபறியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பாராத நெருக்கடிகள் உண்டாகும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் வழியே நெருக்கடிகள் தோன்றும். சிலருக்கு உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். விரய சனி நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் பல வகையிலும் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையை உயர்த்துவார். அவருடைய பார்வைகள் பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கும் ஜென்ம ராசிக்கும் உண்டாவதால் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். உங்ஙள் ராசிநாதன் செவ்வாயும் குருவுடன் இணைவதால் குருமங்கள யோகம் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் சிலரை தவறான வழிக்கும் அழைத்துச் செல்வார். அதனால் உங்கள் செல்வாக்கு அந்தஸ்தில் பின்னடைவு ஏற்படும். மற்றவர் விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். செயல்களிலும் தடுமாற்றம் குழப்பம் ஏற்படும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் இடைவெளியும் உண்டாக வாய்ப்பிருப்பதால் தவறான பாதையை விட்டு விலகுவதும் தவறான வழியில் செல்லாமல் இருப்பதும் உங்களுக்கு நன்மையளிக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையின்படி செயல்படுவதால் மலைபோல் வரும் சங்கடமெல்லாம் பனிபோல் விலகும். வேலையில் இருப்பவர்கள் எடுத்த வேலைகளை முடிக்கும்வரை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். விவசாயிகள் ஒவ்வொரு நாளும் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 9.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18,19,27,28. டிச. 1,10.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
பகிர்கcopied
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »