திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் விமான திருப்பணிக் கொட்டகை நேற்று பெய்த மழையில் சரிந்தது.பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க கவசம் பொருத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. சுமார் ரூ.60 கோடியில் நடைபெறும் இத்திருப்பணிக்காக விமானம் முழுவதும் மறைக்கும் விதமாகதகரத்தினாலான கொட்டகை போடப்பட்டிருந்தது. நேற்று மாலை திருக்கோஷ்டியூரில் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் விமானத்திற்கு போடப்பட்ட கொட்டகை சாய்ந்தது.