Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீதிபதி பெருமாள் பூஜையில் வெற்றிலை வைக்க தவறாதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாயின் பெயரில் விநாயகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2020
01:05


தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாக இடுவது வழக்கம். ஆனால் தாயின் பெயருடன் உள்ள விநாயகர், சென்னை தாம்பரம் அருகிலுள்ள கீழ்படப்பையில் அருள்புரிகிறார்.  
 தட்சனின் மகள்களான கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பெண்களை சந்திரன் மணந்தான். ஆனால் ரோகிணியின் மீது மட்டும் அன்பு காட்டினான். இதனால் வருத்தமடைந்து மற்ற பெண்கள்  தட்சனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும் படியாக சபித்தான். இதிலிருந்து விடுபட எண்ணி பூலோகம் வந்த சந்திரன், இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு விமோசனம் பெற்றான்.  அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்பது திருநாமம். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த நந்திவர்ம பல்லவன், ஒரே சமயத்தில் 108 சிவன் கோயில்களுக்கு திருப்பணி செய்து ஒரே நாளில் கும்பாபிேஷகம் நடத்தினார். அதில் இத்தலமும் ஒன்று.
இக்கோயிலில் நுழைவு வாயிலை கடந்ததும் சாந்தநாயகி சன்னதி உள்ளது. அம்மனின் பாதத்தின் கீழ் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மனே பிரதானம் என்பதால் இப்படி அமைத்துள்ளனர்.  அம்மனை வழிபட்ட பிறகே. பக்தர்கள் சிவனை வழிபடுகின்றனர். சன்னதியின் வெளியில் நிற்போர் அம்மனின் முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி தாழ்வாக உள்ளது. சற்று குனிந்து பார்த்தால் மட்டுமே தரிசிக்க முடியும். பணிவை உணர்த்தும் விதமாக இருக்கும் இவளை வழிபபடும் பிள்ளைகள் பெற்றோரை மதிப்புடன் நடத்துவர். இத்தலத்து விநாயகர் தாயான சாந்த நாயகியின் பெயரால் ‘சாந்த விநாயகர்’  எனப்படுகிறார். இவரை தரிசித்தால் தாயுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும்.
கோயில் முன்மண்டபத்தில் சந்திரன் சன்னதி உள்ளது.  பவுர்ணமியன்று அகோர வீரபத்திரருக்கு வெற்றிலை காப்பிட்டு, விசேஷ பூஜை நடத்தினால் விருப்பம் நிறைவேறும். காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் இங்குள்ளனர் உள்ளனர்.
சித்திரை சதயத்தன்று திருநாவுக்கரசர், ஆடி சுவாதியன்று சுந்தரர் குருபூஜை நடக்கிறது. வெள்ளை யானை மீது சுந்தரர் கைலாயம் சென்றதால் யானை வாகனத்தில் எழுந்தருள்வார். இதை தரிசித்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
செல்வது எப்படி
சென்னை தாம்பரத்தில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாட்கள்
திருநாவுக்கரசர், சுந்தரர் குருபூஜை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகா சிவராத்திரி
நேரம்
காலை 7:00 - 10:00 மணி, மாலை 5:30 - இரவு 8:30 மணி.
தொடர்புக்கு: 98418 81884
அருகிலுள்ள தலம்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் (25கி.மீ.,)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar