Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் பக்தர்கள் அவதி; ... உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் சாமியாட்டம், குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே முள் படுக்கையில் சாமியாட்டம், குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2026
04:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


லாடனேந்தலில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், பௌர்ணமி,அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், முத்துமாரியம்மனுக்கு நாகராணி அம்மையார் 62, என்பவர் தினசரி பூஜைகள் செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத மண்டல பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை ஒன்பது மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. மண்டல பூஜையை முன்னிட்டு மார்கழி 18ம் தேதி 45 நாட்கள் விரதமிருந்து நாகராணி அம்மையார் முள் படுக்கையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இதற்காக கோயில் முன் ஏழு அடி உயரத்தில் கத்தாழை, சப்பாத்தி கள்ளி, உடைமுள் , கருவேல மர முள் உள்ளிட்டவைகளால் ஏழு அடி உயரத்திற்கு முள் படுக்கை தயார் செய்யப்பட்டது.


இன்று மதியம் 1:00 மணிக்கு நாகராணி அம்மையார் புனித நீராடி விநாயகரை வழிபட்ட பின் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை வலம் வந்தார். முள் படுக்கைக் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்களின் கோஷத்தின் இடையே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் ஏறி சாமியாடி அருள் வாக்கு சொல்வார். லாடனேந்தல், திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெண் சாமியார் முள்படுக்கையில் தவம் செய்யும் காட்சியை தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சோமசுந்தரம், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar