பரமக்குடியில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2026 02:01
பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்சவம் நடந்தது.
சவுராஷ்டிர குல குருவாக விளங்கும் நாயகி சுவாமிகள் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவர் பெருமாளை அடைய தன்னை நாயகியாக பாவித்து வந்தார். இதன்படி தலையில் கொண்டை சூடி பெருமாளின் கீர்த்தனைகளை பாடி இறைவனின் திருவடியை அடைந்துள்ளார். சாவுராஷ்டிர மொழியில் ஏராளமான கீர்த்தனைகளை பாடியுள்ளார். சுவாமிகள் பிறந்த மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள் கோயிலில் நாயகி சுவாமிகள் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடந்தது. பின்னர் பாகவதர்கள் பஜனை கோஷ்டியினருடன் வீதி வலம் நடந்தது. மாலை 6:30 மணி தொடங்கி மாதர்கள் சங்கத்தினர் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.