வாலாஜாபாத் : ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை, சிலர் வெட்டி எடுத்து சென்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில் உள்ள, பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ் வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பூசிவாக்கம் ஊராட்சி, பாபா சாகிப்பேட்டையில் உள்ளது.இந்நிலத்தில் இருந்த கொடுக்காபுளி மற்றும் சீமைக்கருவேல மரங்களை, அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதி இன்றி, சிலர், வெட்டி விற்பனை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.