பதிவு செய்த நாள்
16
மே
2020
11:05
சபரிமலை : சபரிமலையில், வைகாசி மாத பூஜை, நேற்று ஆரம்பமானதோடு, கலச பூஜையும் நடந்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, சுவாமிக்கு அபிஷேகம் நடத்தினார். பக்தர்கள் இல்லாமல், ஊழியர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர். கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கலச பூஜை நடத்தினார். 25 வெள்ளி கலசங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜைகள் செய்து, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின், உச்ச பூஜை நடத்தப்பட்டு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 19ம் தேதி- இரவு, 7:30 மணி வரை நடை திறந்திருக்கும். வழிபாடுகளை, ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.