பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: மோடி சார்பில் முதல் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2020 11:05
டேராடூன்: புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 28 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி சார்பில், சாமிக்கு முதல் பூஜை செய்யப்பட்டது. பூஜையில் இந்தியா மற்றும் உலக நலனுக்காக பிரார்த்தனை நடைபெற்றது. கோயிலுக்குள் சென்றவர்கள் அனைவரும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நடை திறக்கப்பட்டதற்கு மாநில முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடை திறக்கப்பட்டதை முன்னிட்டு, கோயில் 10 குவிண்டால் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி, பத்ரிநாக் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.