பதிவு செய்த நாள்
18
மே
2020
01:05
சென்னை, : பூசாரிகள் சங்கத் தலைவர், வாசு கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், அறநிலைய துறை கட்டுப்பாட்டிலும், கட்டுப்பாட்டில் இல்லாமலும், 5,000 கோவில்கள் உள்ளன.
இதில், 1,700 கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பூசாரிகள், பணம் தங்களின் வங்கி கணக்கில், இன்று வரும், நாளை வரும் எனக் காத்திருந்து, ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.நான், சேலம், கெங்கவல்லி, மகா மாரியம்மன், செல்லியம்மன் கோவில் பூசாரியாக உள்ளேன். சங்கத்தின் தலைவரான எனக்கு, கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.மற்ற பூசாரிகளுக்கு கிடைக்காத நிலையில், இந்த நிதியை நான் பெறுவது சரியாக இருக்காது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட தொகையை, அறநிலைய துறைக்கே திருப்பி அனுப்புகிறேன். இந்த நிதியை, வேறு ஒரு பூசாரிக்கு வழங்கி, பயன்படுத்தி கொள்ளட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.