கள்ளக்குறிச்சி: கொரோனா நோய் பிடியிலிருந்து மக்கள் நலன் வேண்டி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் யாக பூஜை நடந்தது.
கொரோனா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தீர்வு கோரி வேதசிவ ஆகமங்களில் கூறியுள்ளபடி யாகங்கள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, ஹஸ்ர ஜபம் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை சூரிய பூஜை செய்த பின், ஹஸ்ர மந்திரங்களால் பிரயோகம் செய்யப்பட்டுஆவாகனம் செய்து வைத்தனர். தொடர்ந்து ஹஸ்ர யாகம் நடத்தினர். பூர்ணாகுதிக்கு பின் சிதம்பரேஸ்வருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.சிறப்பு அலங்காரங்களுக்கு பின் சிவபூஜைகள் செய்யப்பட்டது. அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் கோவிலில் அனுமதிக்கப்படவில்லை.