ராமேஸ்வரம்: கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலக்காமல், பக்தர்கள் நீராடததால் தூய்மையாக உள்ளது.
அக்னிதீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் தங்களது உடுத்திய துணிகளை கடலில் வீசுவதாலும், கோயிலை சுற்றியுள்ள லாட்ஜ்கள், வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் கலந்ததால் அக்னி தீர்த்தம் மாசடைந்து, கருப்பு நிறமாக மாறி பக்தர்களுக்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டது. இதனை கட்டுப்படுத்த உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தவிட்டும் செயல்படுத்த முடியாமல் போனது. ஊரடங்கால் மார் 24 முதல் கோயில் நடை அடைக்கப்பட்டது. லாட்ஜ்கள் மூடியதால் அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலக்காமல் தூய்மையாக உள்ளது.