ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடற்கரையை அடைந்தார். தன் வருத்தம் தீர அங்கு நவக்கிரகங்களை வழிபடலாம் தீரும் என கருதினார். அதற்காக நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முயன்றார். அப்போது சீற்றமுடன் கடல் இருந்ததால், பெருமாளை மனதிற்குள் வழிபட்டார். அவர் அருளால் கடல் அடங்கியது. அதனடிப்படையில் இங்குள்ள சுவாமி, ‘கடல் அலை அடைத்த பெருமாள்’ என பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கடலடைத்த பெருமாள்’ என மருவி விட்டது. இன்றும் இங்கு அலை இல்லாமல் அமைதியாக கடல் காட்சியளிக்கிறது. ராமர் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்களை வழிபட்டால் தோஷம் நீங்கி கிரகங்களால் நன்மை ஏற்படும்.