தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டி செம்பியன் மாதேவி. ‘செம்பியன்’ என்பது சோழப் பரம்பரையைக் குறிக்கும். ‘மாதேவி’ என்பது ‘மகாராணி’ எனப் பொருள்படும். தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் இந்த அம்மையாரின் பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. செம்பியன் மாதேவி என்னும் இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோயில் இவரால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுக்குறிப்பில் ‘நமது குலமாணிக்கமாகிய நம் பிராட்டியார் செம்பியன் மாதேவியார்’ என்று எழுதப்பட்டுள்ளது.