திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 20 நாட்களுக்கு முன், துவங்கி வெகு விமர்சையாக நடந்தது. வர்த்தகர் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த மண்டலபடியில் ஸ்வாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷே ஆராதனை நடந்தது. ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாட்டை வர்த்தகர் தொழிலாளர் சங்க தலைவர் பிச்சை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர். திருவிழாவின் நிறைவுநாள் நேற்று (9ம் தேதி) மாலை கொடியிறக்கத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. ஏற்பாட்டை செயல் அலுவலர் நீதிமணி செய்திருந்தனர்.