வெங்கடகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2012 11:05
அரியலூர்: வெங்கடகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் பற்றி பகவான் காமராஜ் ஸ்வாமிகள் ஆய்வு செய்தார். அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலை புதுப்பித்து, புதிய கட்டுமான பணிகளுடன் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சியில் கிராம பொதுமக்கள் ஈடுபட்டனர். பல லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தியுள்ள மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 7ம் தேதி வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோவில், முனியப்ப ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகள் ஆலயத்துக்கான கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையடுத்து பல்வேறு கோவில்களின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று நடத்திய, கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் நேற்று வெங்கடகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து கோவில் திருப்பணி பற்றி பார்வையிட்டதுடன், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான வழிமுறைகள் பற்றி, ஊர் பிரமுகர்களிடம் விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் வெங்கடகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி மற்றும் கிராம பிரமுகர்கள் சுப்ரமணியன், ஆறுமுகம், பழனிவேல், மருதமுத்து கோவில் பூசாரி பச்சைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.