மேட்டுப்பாளையம்: கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அமாவாசை அன்று பக்தர்கள் கோவில் நுழைவாயில் கேட்டு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும், சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஊரடங்கால் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று அமாவாசை முன்னிட்டு, பக்தர்கள் வாகனங்களில் வந்து, கோவில் கேட் முன்பாக கற்பூரமும், எலுமிச்சம்பழம் தீபமேற்றி வழிபட்டுச் சென்றனர்.