பதிவு செய்த நாள்
26
மே
2020
06:05
சேலம்: ஊரடங்கு அமலால், சேலத்தில் வீடுகள், மொட்டை மாடிகளில் தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடினர். கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த, ஏப்.,25ல், ரமலான் நோன்பு துவங்கியது. ஊரடங்கு உத்தரவால் ரமலான் காலத்தில், பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ரம்ஜானை முன்னிட்டு, சேலத்தில் சூரமங்கலம், பச்சப்பட்டி, கோட்டை, முகம்மது புறா, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, கோரிமேடு, அம்மாபேட்டை பகுதி இஸ்லாமியர்கள், வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் முக கவசம் அணிந்து, சமூக விலகலுடன் தொழுகை நடத்தினர். பின்னர், அவர்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சேலம், ஜாமியா மஸ்ஜித், கோட்டை மேலத்தெரு பள்ளிவாசல், முகம்மது புறா, பச்சப்பட்டி உட்பட, சேலம் மாவட்டத்தில் உள்ள, 33 பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் கூடுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.