பதிவு செய்த நாள்
27
மே
2020
01:05
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியம், பூசாரிகள் நலச்சங்கம் சார்பில், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக, 7,200 ரூபாய்க்கான காசோலை, சேலம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அறிவுரைப்படி, சங்ககிரி ஒன்றிய பூசாரிகள் நலச்சங்கம் சார்பில், தலைவர் கண்ணன்அய்யர் தலைமையில், தேவூர், காவேரிப்பட்டி, அம்மாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கோவில் பூசாரிகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக, 7,200 ரூபாய்க்கான காசோலையை நேற்று கலெக்டர் ராமனிடம் வழங்கினர். மேலும், கண்ணன்அய்யர் தனது சொந்த நிதியில் இருந்து, 5,000 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.