நெட்டப்பாக்கம்:மடுகரை கூத்தாண்டவர் சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது.மடுகரை கூத்தாண்டவர் சுவாமி கோவில் தேர்த் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதி சாகை வார்த்தல், 9ம் தேதி இரவு மனிதனின் மார்பு மீது மஞ்சள் தூள் இடித்தல், கூத்தாண்டவர் சுவாமி பிரார்த்தனை தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பெரியசாமி எம்.எல்.ஏ., தேர்வடம் பிடித்து, தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தேர்வடம் பிடித்து இழுத்தார். நிகழ்ச்சியில் மடுகரை மரக்காலீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி நந்தகுமார், முன்னாள் வீட்டு வசதி சங்கத் தலைவர் அம்மைநாதன், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று அக்னி மிதித்தல், மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு அழுகோலம் நிகழ்ச்சி, தேரடி திரும்புதல் நடந்தது.