பதிவு செய்த நாள்
11
மே
2012
11:05
தூத்துக்குடி : தூத்துக்குடியிலுள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் கோயிலில் பாலாபிஷேக விழாவும், லெவிஞ்சிபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை பெருங்கொடை விழாவும் நடந்தது. கொடைவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலையில் கும்பபூஜை, கணபதிஹோமம், துர்கா ஹோமம், லெட்சுமி ஹோமம், தனபூஜை, தீபாராதனையும், தொடர்ந்து காலை காந்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் மாரியம்மன் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், உச்சிகால பூஜையும், மதியக்கொடை, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாவிளக்கு, அக்கினிச்சட்டி, ஆயிரம்கண்பானை நேமிசத்தை பக்தர்கள் கொண்டு வந்தனர். மாவட்ட தலைமை டி.ராஜேந்தர் நற்பணி மன்றம் சார்பில் சிம்பு கண்ணன் தலைமையில் இன்னிசை கச்சேரி நடந்தது. முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது தீபாராதனையும் படைப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளான தலைவர் மாரியப்பன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் மாரியப்பன், துணைத்தலைவர் ராஜா, துணைச்செயலாளர் ராஜேந்திரன், கௌரவத்தலைவர் சுப்பையா மற்றும் நிர்வாகக்குழுவினர்களான செந்தில்குமார், தனபால், பக்கிள்சாமி, மகேந்திரபூபதி, ரமேஷ், கருப்பசாமி, நாராயணன், கார்த்திக், சின்னத்துரை, ஐயப்பன், குமார், கணேசன், காசி, ராஜா மற்றும் வரிதாரர்கள் செய்திருந்தனர்.