பதிவு செய்த நாள்
11
மே
2012
11:05
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் நேற்று 1008 சுமங்கலி பூஜை நடந்தது. இன்று (11ம் தேதி) 5004 மாவிளக்கு பூஜை நடக்கிறது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று விநாயகர் வழிபாடு, விநாயகர் வேள்வி யானை வழிபாடும், மூலிகை வேள்வி நிறை அவி அளித்தல், மகா வல்லப விநாயகர் சிறப்பு நீராட்டுதல், அலங்கார தீப வழிபாடும் நடந்தது. தொடர்ந்து ஒன்பது கோள் வேள்வி, பசு வழிபாடு, யாகசாலை பூஜையும், அம்பாள் வேள்வி, சுவாமி வேள்வி, நிறை அவி அளித்தல் 1008 சங்குபூஜையும், தீப வழிபாடு, சிறப்பு நீராட்டுதல், அலங்கார தீப வழிபாடு, 1008 அம்பாள் போற்றி துவக்கம், 1008 சுமங்கலி பூஜையும், 1008 அம்பாள் போற்றி துவக்கம், அம்பாளுக்கும், சுவாமிக்கும் அலங்கார தீப வழிபாடு நடந்தது. இன்று காலை 7 மணிக்கு 1008 அம்பாள் போற்றி துவக்கமும், காலை 8 மணிக்கு கடற்கரையில் இருந்து அம்பாளுக்கும், சுவாமிக்கும் 504 பால்குடம் எடுத்து திருவீதி உலா வருதலும், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையும், 1008 கலச பூஜையும், அம்பாள் வேள்வி, சுவாமி வேள்வி, நிறை அவி அளித்தல், பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கும் சிறப்பு நீராட்டுதல், 504 பால்குடம், 1008 கலச நீராட்டுதல், பகல் 1மணிக்கு அலங்கார தீப வழிபாடும், மாலை 4 மணிக்கு அம்பாள் சக்தி அலங்காரமும், 1008 அம்பாள் போற்றி துவக்கமும், மாலை 5.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு சிறப்பு மலர் முழுக்கு வழிபாடும் நடக்கிறது. இந்த இரண்டு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசராகுழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, மாதாந்திர மாவிளக்கு பூஜை விழாக் குழுவினர், சக்தி ஸ்ரீ அம்பிகை ஆகியோர் செய்து வருகின்றனர்.