கடையநல்லூர் : ஆய்க்குடி கோயிலில் வரும் 14ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆய்க்குடி சவுந்தர்யநாயகி உடனுறை காளகண்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மாத பிறப்பு தோறும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. வைகாசி மாதத்திற்கான திருவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடக்கிறது. நோய், நொடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக திருவிளக்கு பூஜை நடக்கிறது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச் செல்லுமாறு விழாக் கமிட்டியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.