எண்டியூர் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2012 11:05
திண்டிவனம்:எண்டியூர் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கு தினமும் மகா அபிஷேக ஆராதனைகள், உற்சவ மூர்த்திகள், ஜல கிரீடை, அரக்கு மாளிகை, வில் வைபவம், திருக் கல்யாண உற்சவம், சுபத்திரை மாலையிடுதல், தபசு ஆகிய மகாபாரத திருக்காட்சிகள் சிறப்பு அலங்காரங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச் சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் ஆயிரக்கணகான பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர். கோவிலிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட பூங்கரகம் எடுத்த பக்தர்கள் மற்றும் சுவாமிகள் வீதியுலா, கோவில் வலம் வந்து முதலில் தீ மிதித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன செலுத்தினர். பூக்குழியில் இருந்து நெருப்பு எடுத்துச்சென்று அம்மனின் மடியில் வைக்கப்பட்டது. கலச பானையில் பெரிய அளவிலான கத்தி நிறுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தினமும் இரவில் மகாபாரத கூத்துக்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 10 ம் நாள் உற்சவமாக பட்டாபிஷேக விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்களும் செய்திருந்தனர்.