ஓசூர்: கர்நாடகாவையொட்டிய தமிழக எல்லையோர கிராமத்தில் குறும்பர் இன மக்கள், கோவில்திருவிழாவையொட்டி தலையில், தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கர்நாடகாவையொட்டிய தமிழக எல்லை கிராமம் கொத்தூர். இக்கிராமத்தை சேர்ந்த குறும்பர் இன மக்கள், கர்நாடகா மாநிலம் ஆணைக்கல், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாக உள்ளனர். இவர்கள் கொத்தூரில் உள்ள கட்டதலிங்ககேஷ்வர வீரபத்திரஸ்வாமி குலதெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோவில் திருவிழாவன்று கொத்தூரில் குடும்பத்தோடு கூடும் இவர்கள் விழாவை விமர்ச்சையாக கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக குறும்பர் இன ஆண்கள், வேண்டுதல் நிறைவேறும்பட்சத்தில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். நேற்று நடந்த இந்த விழாவிலும் ஏராளமான பக்தர்கள், தங்களுடைய தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்த்கள் கம்பீரமாக முழங்கால் போட்டு நிற்க, கோவில் பூசாரி அவர்களுடைய தலையில் குறைந்தப்பட்சம் மூன்று முறை முதல் பத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்தனர். மொத்தம் நேற்று நடந்த திருவிழாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், கரகாட்டசம், நாட்டு புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாடுகளுக்கு அலங்காரம் செய்தும், அவற்றை தெய்வமாக நினைத்தும் பக்தர்கள் வழிப்பட்டனர்.