பதிவு செய்த நாள்
11
மே
2012
05:05
கேரளா எர்ணாகுளம் பெரும்பாவூர் கூவப்பாடி ஐமுறி மகாதேவன் திருக்கோயிலில் மிகப்பெரிய நந்தி புராண விளக்க யாகம் நடைபெறுகிறது. மே 8, 2012 முதல் மே 13, 2012 வரை நடைபெறும் இந்த யாகத்தை மகாகவி அக்கிதம் அவர்கள் நடத்துகிறார். இந்த யாகத்தில் ஸ்ரீஆலங்கோடு லீலா கிருஷ்ணன், ஸ்ரீ ஏ.யு. ரகுராம பணிக்கர், இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாதரன் மாஸ்டர், திரைப்பட இயக்குனர் ஸ்ரீபாபு நாராயணன் (அனில் பாபு), சிற்பி லேட் அப்புக்குட்டன், இசையமைப்பாளர் கலாரத்தினம் ஸ்ரீ கே.ஜி.விஜயன், காலடி ஸ்ரீசங்கராசாரியா சமஸ்கிருத பல்கலைகழக சுவர் சித்திர கலை நிபுணர் ஸ்ரீ சாஜூ துருத்தில் மற்றும் யக்ன சொற்பொழிவாளர் ஸ்ரீ வி.பி. மாதவன் நம்பூதிரி, தலைமை விருந்தினர் ஆர்ஸ ஞான பிரச்சார சபா, டாக்டர் லீலாவதி ஆகியோர் சிறப்பிக்கப்படுகின்றனர்.
ஐமுறி மகாதேவன் திருக்கோயிலில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி சிற்பம் எளிமையாக 2011 நவம்பர் மாதத்தில் ஸ்ரீ ஸ்ரீலாலன் மணி, திருமதி ஜெயந்தி மணி அவர்களால் சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகத்திலேயே மிகவும் பெரியதாக கருதப்படும் இச்சிற்பத்தை சிறப்பிக்கவும், பக்தர்களின் பக்தியை மேலும் வளர்க்கவும் உபபுராணங்களில் குறிப்பிட்டுள்ள மூன்றாவது புராணமான நந்தி புராணத்தை ஐந்து தினங்களில் யக்ன சொற்பொழிவு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூதங்களிலும் நிறைந்திருக்கும் சிவபெருமானை பிரார்த்தனை செய்வதே இதன் சிறப்பு. இந்த யக்னத்தை மலையாக சாகித்யத்தின் ஆலவிருட்சமாக இருக்கும் மகாகவி அக்கிதம் அவர்கள் சிறப்பிக்க உள்ளார். யக்னமும், யாகமும் சிறப்புற நடைபெற அந்த சிவபெருமானை அனைவரும் பிரார்த்திப்போம்.
விழா நிகழ்ச்சிகள்
2012 மே 8ம் தேதி செவ்வாய்க்கிழமை யக்ன தீபமேற்றி பிரம்ம கலச பூஜையும், கலச பிரதிஷ்டையும் நடைபெற்றது. இரவு தீபாராதனைக்கு பின் பஞ்சபூத பூஜை, கிரந்த பூஜை, கிரந்த பிரதட்சனம், மஹாத்மிய பிரதட்சனம் நடைபெற்றது.
2012 மே 9ம் தேதி புதன்கிழமை பிரத தாகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பிரபாத ஆரத்தி, உஷா பூஜை, கலச பூஜை (திரவியம்-பச்சரிசி), சமூக கணபதிஹவனம், ஸ்ரீமத் நந்தி புராண பாராயணம், ஆச்சார்ய கதை சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பஞ்சாட்சர அர்ச்சனை, 6.30 மணிக்கு மஹா தீபாராதனை, கலசாபிஷேகம், சாயங்கால பாராயண சமர்ப்பணம் ஆரத்தி,முதன்மை சொற்பொழிவு மற்றும் பிரசாதம் வழங்குதல். மாலை 7.30 மணிக்கு சேவாதாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.
2012 மே 10ம் தேதி வியாழக்கிழமை துதி யாகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பிரபாத ஆரத்தி, உஷா பூஜை, கலச பூஜை (திரவியம்-சந்தனம்), சமூக கணபதிஹவனம், ஸ்ரீமத் நந்தி புராண பாராயணம், ஆச்சார்ய கதை சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோமாதா பூஜை, பஞ்சாட்சர சமூக அர்ச்சனையும், மாலை 7.30 மணிக்கு சோபான சங்கீத ஆராதனையும் நடைபெற்றது.
2012 மே 11ம் தேதி வெள்ளிக்கிழமை திருதி யாகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பிரபாத ஆரத்தி, உஷா பூஜை, கலச பூஜை (திரவியம்-நெய்), சமூக கணபதிஹவனம், ஸ்ரீமத் நந்தி புராண பாராயணம், ஆச்சார்ய கதை சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது.
2012 மே 12ம் தேதி சனிக்கிழமை சதுர்த் தாகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பிரபாத ஆரத்தி, உஷா பூஜை, கலச பூஜை (திரவியம்-தேன்), சமூக கணபதிஹவனம், ஸ்ரீமத் நந்தி புராண பாராயணம், ஆச்சார்ய கதை சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது. காலை 8.30 மணி முதல் 9 மணி வரை பிரபாத பாராயணம் சமர்ப்பணம் மற்றும் ஆரத்தி நடக்கிறது. காலை 10 மணிக்கு நடராஜமூர்த்தி சங்கல்ப பூஜை (பூமி தத்துவம்), பகல் 1.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் (கிருத்தானம்), மாலை 5 மணிக்கு காலடி ஸ்ரீ சிருங்கேரி வேத பாடகசாலை ஆச்சார்யா அவர்களின் வேத கோஷம், மாலை 7 மணிக்கு ஸ்ரீஅனுப்மோகன் குழுவினரின் நடனநிகழ்ச்சி நடைபெறும்.
2012 மே 13 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாமகத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பிரபாத ஆரத்தி, உஷா பூஜை, கலச பூஜை (திரவியம்-சந்தனம்), சமூக கணபதிஹவனம், ஸ்ரீமத் நந்தி புராண பாராயணம், ஆச்சார்ய கதை சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது. காலை 8.30 மணி முதல் 9 மணி வரை பிரபாத பாராயணம் சமர்ப்பணம் மற்றும் ஆரத்தி நடக்கிறது. காலை 10 மணிக்கு தட்சிணாமூர்த்தி சங்கல்ப பூஜை, ஸ்ரீவித்யா பூஜை (ஜல தத்துவம்), காலை 11.30 மணிக்கு யக்ன பாராயண சமர்ப்பனம் (ஆரத்தி), அக்னி பிரக்ருதி லயனம், பூர்ணாபுதி, பூர்ண கும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல், மதியம் 1.30 மணிக்கு மஹா பிரசாதம் வழங்கப்படும்.
சேவா பூஜை விவரங்கள்
1. ஒருதின யக்ன சமர்ப்பனம் (நைவேத்யம் அடக்கம்) - ரூ. 7001/-
2. இரண்டு வேளை யக்ன சமர்ப்பனம் (நைவேத்யம் அடக்கம்) - ரூ. 5001/-
3. இரண்டு வேளை யக்ன சமர்ப்பனம் - ரூ 4001/-
4. பஞ்சபூத சிவசங்கல்ப பூஜை (ஐந்து தினங்கள் சேர்த்து) - ரூ. 2501/-
5. ஒருவேளை யக்ன சமர்ப்பனம் - ரூ. 2001/-
6. நைவேத்ய சமர்ப்பனம் - ரூ. 1001/-
பூஜையில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள் 98477 48595, 94466 84378, 94963 40708, 94471 87916 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விபரங்களைப் பெற்று கொள்ளலாம்.